அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் தரையிறக்கம்…!!
அமைச்சர் எ.வ.வேலு சென்ற தூத்துக்குடி விமானம் மதுரையில் வானிலை மாற்றத்தால் தரையிறக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 77 பேர் பயணித்துள்ளனர். தமிழகத்தின் வங்கக்கடலோரப் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தால் தூத்துக்குடியில் மிக மோசமான வானிலை நிலவியது., இதனால் விமானம் அங்கு தரையிறக்க முடியதா காரணத்தால் வானிலேயே விமானம் சில நிமிடங்கள் வட்டமடித்துள்ளது.
வானிலை மாற்றத்தால் தூத்துக்குடி விமானம் மதுரை விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 77 பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி நலமுடன் தரையிறக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..