தமிழகத்திற்கு ஆரஞ்சு அலார்ட்…!! மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!
தமிழ்நாட்டில் நவம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோரப் பகுதிகளை சுற்றி உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் உருவாகி உள்ள நிலையில், இன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வங்கக்கடலில் மையம் கொண்டு புயலாக மாறும் எனவும் நவம்பர் 25 ஆம் தேதி முதல் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடும் வானிலை ஆய்வுமையம் என்பதால் அரஞ்சு அலார்ட் விடுத்துள்ளது.
மேலும் தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..