அமைச்சர் அன்பில்மகேஷ் அதிரடி உத்தரவு..!! குஷியில் பள்ளி மாணவர்கள்…!!
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை அளிக்கபட்டாலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது… தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் கனமழை வலுவடைந்துள்ளது. எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னையில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க அதிக வாய்ப்புகள் இருப்தாகவும் சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது..
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் கோயம்புத்தூரில் கனமழையின் காரணமாக கோயம்பத்தூரின் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மதியம் வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்திருந்தார்.
இப்படி இருக்கையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் கூறியிருந்தார். ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்..
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. “கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கான இணையதளம் வழியாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தாமல் ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில்மகேஷ் அனைத்துப் பள்ளி நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..