வாகன ஓட்டிக்களுக்கு ஓர் குட் நியூஸ்..!! இனி பாலத்தின் மீது வாகனம் நிறுத்த அபராதம் இல்லை..!!
சென்னையில் பாலங்கள் மீது நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என மாநகர காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்..
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது… தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் கனமழை வலுவடைந்துள்ளது. எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…
தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னையில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க அதிக வாய்ப்புகள் இருப்தாகவும் சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது..
சென்னையை பொறுத்த வரையில் கனமழை என்றாலே பெரிதும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.. குறிப்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி ஆறுப்போல காட்சி அளிக்கும் இதனால் வாகனங்கள் மிகுந்த சேதத்திற்கு உள்ளானது…
குறிப்பாக வெள்ளத்தால் கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்படுகின்றன.
எனவே இந்த முறை இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்…
நேற்று மாலை முதலே வாகன ஓட்டிகள்.. தங்களுடைய கார்களை பாலங்கள் மீது நிறுத்தி வைத்து வருகின்றனர்..
அதாவது நேற்று முதலே தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்திலும், பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் வாகன உரிமையாளர்கள் நிறுத்த தொடங்கியுள்ளனர்..
இப்படி பாலங்கள் மீது வாகனங்கள் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டால்.. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காவல்துறையினர் சார்பில் தெரிவித்துள்ளனர்..
அதனையடுத்து பாலத்தின் மீது நிறுத்தப்படும் கார்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அபராதம் விதித்தாலும் பரவாயில்லை எங்களுக்கு கார் தான் முக்கியம் எனக் கூறி, உரிமையாளர்கள் கார்களை நிறுத்தி வைக்கின்றனர்…
எனவே பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்த, எந்த வித தடையும் இல்லை. அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை பள்ளிக்கரணை மேம்பாலத்தின் மீது நிறுத்தி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..