குறைந்தது தக்காளி விலை..!! இன்று ஒரு கிலோ தக்காளி..?
தங்கம் விலை குறைந்தாலும் தக்காளி விலை குறையாது போல் இருக்கிறது என சொல்லும் வகையில் தக்காளி விலை அதிகரித்து கொண்டே இருந்தது.., குறிப்பிட்ட ஒரு சில ரேஷன் கடைகளில் மட்டுமே தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலைல்யில் இன்று தக்காளி விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 135 ரூபாய்க்கும் சில்லறை கடைகளில் 140 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
400 டன் தக்காளி வரத்து கோயம்பேடு வந்துள்ள நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது.
தக்காளி மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்படுகிறது.
வெங்காயம் கிலோ 18 ரூபாய்,
தக்காளி கிலோ 130 -90 ரூபாய்
உருளைகிழங்கு கிலோ 19 ரூபாய்,
சின்ன வெங்காயம் கிலோ 70 ரூபாய்,
ஊட்டி கேரட் கிலோ 40 ரூபாய்,
பெங்களூர் கேரட் கிலோ 20 ரூபாய்,
பீன்ஸ் எடை 90 ரூபாய்,
பீட்ரூட் (ஊட்டி) கிலோ 36 ரூபாய்,
கர்நாடக பீட்ரூட் கிலோ 25 ரூபாய்,
செளசெள எடை 18 ரூபாய்,
முள்ளங்கி கிலோ 13 ரூபாய்,
முட்டை கோஸ் ஒன்று 15 ரூபாய்,
வெண்டைக்காய் கிலோ 25 ரூபாய்,
உஜாலா கத்திரிக்காய் எடை 25 ரூபாய்,
வரி கத்திரி எடை 30 ரூபாய்,
பாவக்காய் எடை 40 ரூபாய்,
புடலங்காய் ஒன்று 15 ரூபாய்,
சுரக்காய் ஒன்று 15 ரூபாய்,
சேனைக் கிழங்கு கிலோ 43 ரூபாய்,
சேமகிழங்கு எடை 35 ரூபாய்
காலிபிளவர் ஒன்று 20 ரூபாய்,
வெள்ளரிக்காய் ஒன்று 12 ரூபாய்,
பச்சை மிளகாய் கிலோ 40 ரூபாய்,
பட்டாணி கிலோ 190 ரூபாய்,
இஞ்சி கிலோ 110 ரூபாய்,
பூண்டு கிலோ 140 ரூபாய்,
அவரைக்காய் எடை 55 ரூபாய்,
மஞ்சள் பூசணி ஒன்று 17 ரூபாய்,
வெள்ளை பூசனி ஒன்று 20 ரூபாய்,
பீர்க்கங்காய் கிலோ 40 ரூபாய்,
நூக்கள் எடை 20 ரூபாய்,
கோவைக்காய் கிலோ 18 ரூபாய்,
கொத்தவரங்காய் கிலோ 25 ரூபாய்,
வாழைக்காய் ஒன்று 8 ரூபாய்,
வாழைதண்டு எடை 50 ரூபாய்,
வாழைப்பூ ஒன்று 20 ரூபாய்,
பச்சை குடமிளகாய் கிலோ 55 ரூபாய்,
வண்ண குடமிளகாய் கிலோ 180 ரூபாய்,
கொத்தமல்லி கட்டு 3 ரூபாய்,
புதினா ஒரு கட்டு 3 ரூபாய்,
கருவேப்பிலை கட்டு 20 ரூபாய்,
கீரை வகைகள் 12 ரூபாய்,
ஒரு கிலோ மாங்காய் 80 ரூபாய்,
ஒரு தேங்காய் 25 ரூபாய்.
Discussion about this post