இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என சொல்லுபவர்களே கோடிகணக்கில்..? ஐகோர்ட்டில் அமைச்சர் சேகர்பாபுவின் காரசார விவாதம்..!!
இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என சொல்லிக்கொண்டு, கோயில் நிலங்களை ஒன்றிய அரசு ஆக்கிரமைத்துள்ளது.
கோவில் நிலத்தை ஆக்கிரமைப்பு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராக இந்த வழக்கு பதிவிடப்பட்டுள்ளது.
சென்னை உயிர்நீதி மன்றத்தில்.., நீதிபதி அனிதா சுமந்தின் முன் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கில்.., சனாத்தனத்தை ஒழிக்கப்போவதாக சொல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அமைச்சர் அ.ராசா போன்ற எம்.பிக்கள் எதனை அடிப்படையாக கொண்டு சனாதனத்தை ஒழிப்போம் என சொல்லுகிறார்கள், இவர்கள் அமைச்சராக செயலாற்ற என்ன தகுதி உள்ளது.
என இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் கோ-வாரண்டோ வழக்கை தொடர்ந்துள்ளனர்.
மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும்…, அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டுமென நீதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.
அப்போது இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகினார்.
அப்போது பேசிய அவர், இந்த வழக்கில் சட்டமன்ற சிறப்பு செயலாளருக்கு பதிலாக சட்டமன்ற செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்.
சனாதன ஒழிப்பு மாநாட்டின் போது பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை கோட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த சனாதனம் ஒழிப்பு மாநாட்டின் போது பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை மற்ற யூடியுப் சேனல்கள் பதிவிட்டு இருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்..
விசாரணைக்கு வந்துள்ள இந்த மனு ஏற்றத்தக்காதல்ல எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென வழக்கறிஞர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த இரு மனுக்களின் மீதும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்போவதில்லை, அமைச்சர் சேகர்பாபுவின் வழக்கையும் வாதடிய பின் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
பி.கே.சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி வழக்கை தொடர்ந்தார்.
அந்த வாதத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களையும்.., கோவில் நிலங்களையும் ஆக்கிரமைப்பு செய்துள்ளனர்.
ஆக்கிரமைப்பு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால்.., சில உள்நோக்கத்துடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சனாதனம், இந்து மதம் இரண்டும் வெவ்வேறு இல்லை.., இவை இரண்டும் ஒன்று தான்,
இந்து மதம் என்பதை ஒன்றாக நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பது சனாதன தர்மம் இதை ஏற்றுக்கொள்ள முடியாது ..,
தஞ்சை பெரிய கோவிலை உருவாக்கிய ராஜாராஜா சோழன் ஒரு இந்து.., ஆனால் அவர் சனாதனத்தை ஒருமுறை கூட ஏற்றுக்கொண்டதே கிடையாது.
இந்து மதம் உருவான பின்னரே சனாதனம் தோன்றியது.., உலகெங்கும் பரவி இருக்கும் இந்து மதத்தை சனாதனம் என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் அடக்கி வைத்து விட முடியாது.
மனு ஸ்மிருதிக்கு எதிராக செயல்படுவது எப்படி இறையான்மைக்கு எதிரானதோ, சனாதன தர்மத்தை ஒப்பிட முடியாது.
இந்த இரண்டு வழக்கறிஞர்கள் வாதடிய பின்.., வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் அ.ராசா தரப்பில் விவாதம் நாளை தொடரும் எனவும் நீதிபதி கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..