5 லிட்டர் பால் விலை உயர்வு மக்களை பாதிக்காது என்று திருவேற்காட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார்.
5 லிட்டர் அளவு கொண்ட பச்சை நிற பால் பாக்கெட்டின் விலையை ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ளது. அதாவது லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் 5 லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 220 ரூபாயாக உயர்த்தி ஆவின் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு வலுத்து வந்து நிலையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுக்குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
5 லிட்டர் பால் விலை உயர்வு பொது மக்களை பாதிக்காது என்றும் வணிக ரீதியிலான பால் பாக்கட் விலை மாநிலம் முழுவதும் ஒன்றாக இருக்கவே விலை சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், மருத்துவக் கல்விக்கு சீட் கிடைக்காவிட்டால் வாழ்க்கையில் ஒன்றும் கெட்டுப் போகாது. எத்தனையோ துறைகளில் சாதனையாளராக வர முடியும் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.