சென்னை ஐசிஎப் காவல் நிலையத்தில் பரிதாபமாக உயிர் இழந்த இளைஞர்..! காரணமான 3 போலீசார் மீது வழக்கு பதிவு..!!
சென்னை ஐசிஎப் காவல் நிலையத்தில் இளைஞர் உயிர் இழந்த சம்பவம் குறித்து 3 போலீசார் மீது வழக்கு பதிவு செய்து குற்றபத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞ்சர் உயிர் இழந்த சம்பவம் குறித்து ஆய்வாளர் ராமலிங்கம் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு இளைஞர் நித்தியராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் ஆனந்த் வினோத்சிங், மற்றும் விஜயகுமார் மீது குற்ற பத்திரிகையை சிபிசிஐடி அதிகாரிகள் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு தொடர்ந்து கொண்டு இருப்பதால் குற்றவாளி களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும்.., அநியாயமாக உயிர் இழந்த இளைஞருக்கு நீதி கிடைப்பது மட்டுமின்றி இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் தண்டனை விதிக்குமாறு.., நீதிபதிக்கு சிபிசிஐடி அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..