போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் வந்த சென்னை கல்லூரி சாதனை மாணவருக்கு நாங்குநேரியில் பாராட்டு.
போதை தடுப்பு மற்றும் நோயில்லா வாழ்க்கை ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பயணமாக நாங்குநேரிக்கு வந்த சென்னை கல்லூரி மாணவருக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் 76 வது ஆண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் இன்று நடந்தது.
அப்போது சென்னை துறைப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சரத் ரோஷன் என்பவர் போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நோயில்லா வாழ்க்கை ஆகியவற்றை முன் நிறுத்தி விழிப்புணர்வு மற்றும் தனிமனித சாதனை பயணமாக சைக்கிளில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை ஒட்டி கல்லூரி மாணவர் ரோஷன் அந் நிகழ்ச்சியில் தானாக முன் வந்து கலந்து கொண்டார்.அப்போது நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் .
அதில் ரோஷன் தனது பயணம் குறித்து தாசில்தாரிடம் விளக்கினார். இதனை அடுத்து சுதந்திர தின விழா வாழ்த்துடன் அவரை ஊக்குவித்து பாராட்டினார். மேலும் அவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இதனை அடுத்து ரோஷன் அங்கிருந்து தனது சாதனை பயணத்தை தொடர்ந்தார். நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் சென்னையைச் சேர்ந்த மாணவர் கலந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது.
Discussion about this post