கடுகடுவென நிரம்பிய மேட்டூர் அணை..! 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கர்நாடகா உள்ளிட்ட அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது., அந்த வகையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவை அடைந்துள்ளது.
அதனையடுத்து கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.65 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் ஒகேனக்கல் அருவி உள்ளிட்ட 5 அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள காடாகக் காட்சி அளித்து வருகிறது., மேலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒக்கேனக்கல்லுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஜூலை 16ம் தேதி 43 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 11 நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 117 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை அதிகரித்துள்ளது. அதாவது வினாடிக்கு 1.55 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் இன்னும் சில மணி நேரங்களில் மேட்டூர் அணை முழுவதும் நிரம்பி 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முன்னதாகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்டா மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து குறுவை சாகுபடி மற்றும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையில் 12 ஆயிரம் கன அடி நீரை திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
கர்நாடக உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போதைய நிலவரப்படி 20 ஆயிரம் கன அடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், தர்மபுரி, குற்றாலம்., உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் அரசின் சார்பில், ஒலிபெருக்கி மூலம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..