தமிழகத்தில் இன்றும் நாளையும் வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் நிலவி வருகிறது.
இந்நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post