ரிலீஸுக்கு முன்னே வசூல் வேட்டை தொடங்கிய ஜெயிலர்..!! எத்தனை கோடி தெரியுமா..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்திற்கான ப்ரீ புக்கிங் இப்போது தொடங்கியுள்ளது. தொடங்கிய ஒரே நாளில் 8 கோடி வசூலை அள்ளியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாலா திரை உலகில் கலக்கி கொண்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் இதுவரை 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போது ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சனிபிச்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படம் வெளியாக உள்ளது.
அண்மையில் ஜெயிலர் திரைப்படம் டீசர் வெளியாகி பெரும் மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றது.., டீசர் வெளியான சில நாட்களிலேயே படத்தின் இசை வெளியீட்டு விழா வெளியானது அதுவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இன்று டிக்கெட் புக்கிங் வெளியான ஒரே நாளில் ஆன்லைனில் 8 கோடி வசூல் ஆகியுள்ளது, ஒரே நாளில் டிக்கெட் 8 கோடியை எட்டி உள்ளதால் படம் பெரும் வெற்றி காணும் என பலரும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
மற்றொரு பக்கம் நெட்டிசைன்கள் நெல்சனின் படத்தை மீம் போட்டு ஹாஸ்டேக் நெல்சன் பைஃர் என்று போஸ்ட் செய்து வருகின்றனர்.
Discussion about this post