மெட்ரோ ரயில் திட்டம்..! மக்களவையில் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த தொடர், ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடைபெறும். இதில், மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும். பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும். அதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாட்டின் அனைத்து எம்பிக்களையும் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து கட்சிகளும் கட்சி எல்லைகளுக்கு அப்பால் எழுந்து மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து, கொண்டு செயல்பட நாடாளுமன்றத்தின் இந்த கண்ணியமான மேடையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2029ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் எந்த விளையாட்டையும் விளையாடலாம் என்றும் ஆனால் இதுவரை விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் நாட்டை மேம்படுத்துவதில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு :
2023 – 24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முந்தின ஆவணங்களை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அவையில், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு பற்றி எதிர்க்கட்சிகள் அமளியை கிளப்பின. நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பற்றி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவையில் விளக்கம் அளித்து வருகிறார்.
மெட்ரோ ரயில் திட்டத்தில் 60 சதவீத பணிகள் நிறைவேறிய நிலையில் கூட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. நாம் இந்திய ஒன்றியத்தில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. வெளிச்சந்தையில் இருந்து கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
-லோகேஸ்வரி.வெ