மெட்ரோ ரயில் திட்டம் 2-ம் கட்ட பணி..!! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும்,சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது… மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, உங்களுடனான எனது கடைசி சந்திப்பின் போது எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்தமைக்கு நன்றி. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.