தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 8-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.