காட்டெருமை தாக்கி பெண் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் புலிகள் சிறுத்தைகள் காட்டெருமைகள் கரடிகள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட முத்து முடி தேயிலை தோட்டத்தில் பணியாற்றுபவர் சுப்ரா கத்தூம் வயது 20. இவர் வடமாநிலமான ஜார்கண்டை சேர்ந்தவர். இன்று வழக்கம் போல் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது அருகில் இருந்த வனப் பகுதியில் இருந்து பாய்ந்து வந்த காட்டெருமை அவரை தாக்கி விட்டு சென்றது.
இதில் அவர் காயமடைந்தார் .அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு முடிஸ் குரூப் தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மானம் பள்ளி வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மருத்துவமனையில் அவரை சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post