தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66.
நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகன் தான் ஆர். எஸ். சிவாஜி. பிரபல இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதி சகோதரர். லக்கி மேன், கோலமாவு கோகிலா, ஆபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 60க்கும் மேறப்பட்ட படங்களில் ஆர்.எஸ்.சிவாஜி நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த அதிக படங்களில் நடித்துள்ளார்.
சென்னை தேவி கருமாரி தியேட்டரில் நேற்று நடைபெற்ற உலக சினிமா விழா துவக்க விழாவில் ஆர்.எஸ்.சிவாஜி பங்கேற்று இருந்தார். விழாவை முடித்து இல்லம் திரும்பிய அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.