கனிமொழியிடம் அடம்பிடிக்கும் ஆண்கள்..!! எங்களுக்கும் இது வேணும்..? கனிமொழியின் பதில்..?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியில் அத்தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளர் திமுக எம்பி கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், எனக்கு 2வது தாய் வீடு என்றால் அது தூத்துகுடி மட்டுமே, வருகின்ற லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சியில் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவே இல்லை ஆனால்,
திமுக கொடுத்த வாக்குறுதிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி என்றாலே அதில் திமுகவும் ஒன்று. ஆனால் இதுவரை எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாதவர் யார் என்று கேட்டால் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்லுவார்கள், உதாரணமாக ய் 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என சொன்னார்களே செய்தார்களா..?
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வங்கி கணக்கில் குறைந்த பணம் இருந்தால் அபராதம் விதிக்கும் முறை ரத்து செய்யப்படும். காங்கிரஸ் – திமுக கூட்டணி கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டத்தை பாஜக முடக்க நினைக்கிறது.
இந்தியா கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும், பணியாளர்களுக்கான ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்.., என அறிவித்துள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள், 1000 ரூபாய் மகளிர் உதவி திட்டம் முதல், இலவச விடியல் பேருந்து திட்டம் வரை எல்லாம் திட்டங்களும் பெண்களுக்கு மட்டும் தானா, ஆண்களுக்கும் உரிமைத்தொகை கிடையாதா என கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த கனிமொழி ஆண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு, பெண்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் முதல் ஆண்களுக்கும் சலுகைகள் கொடுக்கப்படும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு நிகர் ஆண்களுக்கு மதிக்கப்படுவார்கள் என கூறினார்.
அருணாச்சல பிரேதசம் – ஜாங்னான் :
அதனை தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்காக கச்சத்தீவைக் குறித்துப் பேசும் பாஜக, ஏன் அருணாசலப் பிரதேசம் சீனாவின் அத்துமீறல்கள் குறித்துப் பேசவில்லை..? என கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நிர்வாகப் பிரிவுகளை நிறுவுவதற்கும், பெயரிடுவதற்கும் பொறுப்பான சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சல பிரதேசத்தின் மறு பெயரிடப்பட்டதை ஏன் தெரிவிக்கவில்லை. அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாடு “ஜாங்னான்” என பெயரிட்டு அழைத்து வருவதாக கனிமொழி தெரிவித்தார்.