கனவுகளோடு வாழ நினைத்த மாணவியின் நினைவு நாள்..!!
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் மருத்துவ படிப்பு கனவாய் போனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விளக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பல்வேறு போராட்டங்களையும் தொடர் போராட்டங்களையும் அறிவித்த நிலையில் தற்போது வரை சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீட் தேர்வு விலக்கிற்கு தமிழக ஆளுநர் கையொப்பமிடாமல் மாணவர் நலன் மீது அக்கறை கொள்ளாமல் அலைகழித்து வருகின்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 1- ஆம் தேதி நீட் தேர்வால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவு தினத்தை தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வீரவணக்க நாளாக நினைவு கூர்ந்து வரும் நிலையில்
திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முன்பாக அனிதாவின் புகைப்படத்திற்கு தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்று கூடி தூவி மரியாதை செய்த வீர முழக்கங்கள் எழுப்பினர்.
ஒன்றிய அரசுக்கு எதிராக மாணவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியதுடன் ஒன்றிய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் கடும் கண்டனத்தையும் தெரிவித்ததுடன், ஒன்றிய அரசுக்கு ஆதரவாக தமிழக ஆளுநர் செயல்படுவதை சுட்டிக்காட்டிய மாணவர்கள், மாணவர்களின் உயிரைப் பறிக்கக் கூடிய தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்றும் இன்றைய தினம் ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் கருப்பு தினம் என்றும் தெரிவித்தனர்.