மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சு. வெங்கடேசன். வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிட்டுள்ளது. ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்ஐடிக்கள் ஜெய்ப்பூரில் உள்ள எம்என்ஐடி ஆகிய நிறுவனங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆசிரியரல்லாத அலுவலர் பணி நியமனங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிக்கை அது. என்.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமனதேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி. உடனடியாக உத்தரவை திரும்பப்பெறுக என பதிவிட்டுள்ளார்.
என்.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமனதேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி.