மேல்மலையனூர் உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா..!!
விழுப்புரம் அருகேயுள்ள மேல்மலையனூர் கோவிலில் கடந்த மே 30ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப ஆராதனையும் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் 6ம் தேதி அஞ்சாத கண்ட விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் உலகநாயகி அம்மனுக்கு பால்குடம் எடுத்து வழிபட்டனர். பால்குடத்தை தொடர்ந்து அம்மனுக்கு மஹா தீப ஆராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, நேற்று காலை முளைப்பாரி வைத்து. பெண்கள் கும்மி பாட்டு பாடி சவுக்கையில் இருந்து பெண்கள் உலகநாயகி அம்மனுக்கு வீதி ஊர்வலம் வந்து வழிபட்டனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை மறுநாள் திருவிழா நிறைவாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குதிரை வாகனத்தில் சிம்ம அலாங்காரத்தில் வீதி உலா செல்ல இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post