தவெக கூட்டணி குறித்த முடிவு..? கே.பி.முனுசாமி சொன்ன பதில்…?
தவெக தலைவர் விஜய் கூறுவது அரசியல் கட்சிகளை திசை திருப்பும் நோக்கில் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டு பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக அதிமுக அமைச்சர் கே.பி.முனுசாமி வந்துள்ளார்., அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது.,
பாஜகவுடன் ஏற்றப்பட்டுள்ள முறிவு., முறிவு தான் அதனை மீண்டும் இணைக்க அதிமுக விரும்பவில்லை, இதை எடப்பாடி பழனிசாமியே அறிவித்துவிட்டார். ஒருமித்த கருத்துகளை சிந்திக்கும் கட்சியுடன் மட்டுமே அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறது..
தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். அக்கட்சியில் அவரது ரசிகர்களே தொண்டர்களாக சேர்ந்து வருகிறார்கள்., அவர் நீண்ட தூரம் அரசியலில் பயணிக்க வேண்டும் அப்போது தான் அவர் ஆசைபடும் அரசியல் தலைவர் என்ற அங்கீகாரத்திற்கு செல்ல முடியும்.
அவர் நடத்திய மாநாட்டிற்கு பின், மக்களையும், அரசியல் கட்சிகளையும் திசை திருப்பும் விதமாக அவரது செயல்கள் இருக்கிறது.. அவருடன் கூட்டணியா என்ற கேள்விக்கு நான் முடிவெடுக்க முடியாது கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஒன்று கூடி பேசிய பின்னரே முடிவெடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..