மத்திய இணை அமைச்சருடன் தொடர்பில் மீனா..! ஓபன் டாக் பதிவு..!
நடிகை மீனா:
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை மீனா. 90களின் காலக்கட்டத்தில் கொடிகட்டி பறந்த இவர் 15ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக உள்ளார்.
முதல் படம்:
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இந்த படம் தமிழ் நாட்டில் மட்டுமின்றி ஜப்பானிலும் வெற்றி பெற்று வசூல் வேட்டை ஆடியது. அதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே, எஜமான், அவ்வை சன்முகி, சிட்டிசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
திருமணம்:
வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஜூலை 12 தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் இவரது கணவர் நுரையீரல் தொற்று காரணமாக 2022 ஜூன் 28 அன்று காலமானார்.
இச்சம்பவத்திற்கு பிறகு மீனாவின் இரண்டாம் திருமணத்தைப் பற்றிய வதந்திகள் அதிகமாக பரவி வந்தது. மீனா அவரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார், இந்த திரைப் பிரபலத்தை திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் தொடர்ந்து சமிபத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரின் மகன் ஒருவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஒருவருடன் மீனாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறியது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
வதந்திகளுக்கு பதிலடி:
நடிகை மீனா அவரது எக்ஸ்தள பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு அதில் வதந்திகளை வெறுப்பாளர்கள் தான் உருவாக்குவார்கள், அதனை ஏமாளிகள் பகிர்வர் மற்றும் முட்டாள் அதனை நம்புவர் என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு அவரை பற்றி வதந்தி பரப்புவோருக்காக மறைமுகமாக பதிலடி கூறுவதாக அமைந்து உள்ளது. தற்போது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”