மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீதாராம் யெச்சுரி காலமானார்..!!
உடல்நலக்குறைவின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
1952ம் ஆண்டு சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சுரி தன்னுடைய பள்ளி பருவத்திலேயே அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.. கல்லூரி கால கட்டத்தில் அரசியலில் தீவிரமாக செயல்பட்டார். அதன் பின் மாணவர் சங்கம் மூலம், இடதுசாரி தத்துவத்தின் பாடலால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்…
அதன் பின் அவசர நிலை காலகட்டத்தின் போது ஜேன்என்யு பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்தார். எமெர்ஜென்சியை எதிர்த்து இவர் நடத்திய போராட்டங்கள் அக்காலத்தில் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.. அதனால் அவர் கைது செய்யப்பட்டார்.
வாழ்க்கையையே போராட்டங்களுக்காக அர்ப்பணித்த தலைவர் என சீதாராம் யெச்சூரி அழைக்கப்பட்டார்..
72 வயதான சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் சுவாசப் பிரச்சனையின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.. அன்னாரின் மறைவு இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.