மருதமலை முருகன் சிறப்பும், வரலாறும்..!!
தமிழ் கடவுள் என்று அன்போடு அழைக்கபடுபவர் “முருகர்”
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான மருதமலை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகே 12 கி.மி தொலைவில் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டில் முருகனுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட மருதமலை எதற்கு புகழ்பெற்றது. இதன் சிறப்பு அம்சம் என்ன..? எப்படி தோன்றியது என்பது பற்றி பார்க்கலாம்.
மருதமலையில் முருகர் ” தண்டாயுத பானி” யாக காட்சி அளிக்கிறார். இவர் சுப்பிரமணிய சுவாமி என்றும் அன்போடு அழைக்கப்படுவார். 837 படிகள் கொண்டு மலைகளுக்கு நடுவே இந்த கோவில் அமைந்துள்ளது.
மருதமலையில் மருதா தீர்த்தம் , பாம்பாட்டி சுனை என இரண்டு அருவிகள் இருக்கின்றன. இந்த அருவியில் இருந்து வரும் தீர்த்தத்தை எடுத்து குடித்தால், தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்பது, அறியப்பட்ட உண்மை.
கோயில் பிராகாரத்தின் தெற்கு திசையில் வலம்புரி பிள்ளையார் எனும் ” தான் தோன்றி விநாயகர்” அமைந்துள்ளார். தானாகவே இவர் எழுத்தருளியதால் இவர் தான் தோன்றி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு மற்றொரு சிறப்பு அம்சமாக விளங்குவது. பாம்பாட்டி சித்தர் குகை தான். இவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த, பிரசிதி பெற்ற 18 சித்தர்களில் ஒருவர்.
இவர் மருதமலை கோயிலின் அடி வாரத்தில் தவம் ஒன்று நிகழ்த்தி வந்துள்ளார், ஒரு நாள் முருக பெருமான் பாம்பு வடிவில் சித்தர் முன் தோன்றியுள்ளார். முருகன் தான் என்று அறிந்த சித்தர் அவரை வணங்க தொடங்கினார். பின் வள்ளி, தெய்வானையுடன் தோன்றி சித்தரை ஆசிர் வதித்து, தீர்த்தம் வழங்கினார்.
முருக பெருமானை வழிபட பாம்பாட்டி சித்தர் குகையில் இருந்து, மருதமலைக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைப்பதற்கான நோக்கம் சித்தர் முருகரை சென்று வழிபடுவதற்காக தான் என்று பலரும் சொல்கின்றனர். சில நேரங்களில் சித்தர் இதில் நடனமாடி கொண்டு இருக்கிறார் என்றும் பலரும் சொல்லுகின்றனர்.
-வெ.லோகேஸ்வரி