அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே திருமணமான பெண் கொலை..! கொலையாளி கணவரை தேடும் போலிஸ்..!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பிரகாஷ். இவர் தனியார் ஓட்டுனராகவும், அவ்வப்போது எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார்.
இவருக்கும், தெற்கு தெரு ஆயுதகளம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரது மகள் ஷாலினி (பி ஏ) ஆகிய இருவருக்கும் நான்கு வருடத்திற்கு முன்பு திருமணமாகி இரண்டு வயதில் சர்வேஸ்வரன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
பிரகாஷ் மனைவி ஷாலினி மற்றும் மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோருடன் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் கணவர் பிரகாஷ் மனைவி ஷாலினிக்கும் பிரச்சனை ஏற்பட்டு சத்தம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷாலினி வீட்டில் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்..
இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறைக்கு புகார் அளிக்கப் பட்டுள்ளது. புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கணவர் பிரகாஷ், மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோரை போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர் .
Discussion about this post