வல்லூர் அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து..!
வல்லூர் அனல் மின் நிலையத்தில் டர்பன் வெடித்து திடீர் தீ விபத்து. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகு களில் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்குள்ள 1வது அலகில் டர்பன் ஜெனரேட்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. டர்பனில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அனல் மின் நிலையத்திற்குள் ஏற்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில் ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
சுமார் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக 1வது அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அலகில் மறுசீரமைப்பு பணிகள் முடித்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்க 1மாதம் வரை ஆகலாம் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..