கோவையில் மாற்று திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி..!! முக்கிய பங்கேற்பாளர்கள் யார் யார் தெரியுமா..
கோவையில் வருகின்ற 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரன் பார் வீல்ஸ் மாரத்தான் எனும் மாரத்தான் மற்றும், கூடைபந்து போட்டிகள் கவுண்டம் பாளையம் பகுதியில் நடைபெற உள்ளது. சிற்றுளி அமைப்பின் தலைவர் குணசேகரன் பேட்டி.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், கங்கா மருத்துவமனை மற்றும் சிற்றுளி அறக்கட்டளை இணைந்து, கடந்த 2018ம் ஆண்டு முதல், மாற்று திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியில் கூடைபந்து போட்டி மற்றும், மாற்று திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டிகளை ரன்ஸ் பார் வீல்ஸ் மாரத்தான் எனும் தலைப்பில் நடத்த இருப்பதாக இன்று கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கங்கா முதுகு தண்டு வட முறிவு மறுவாழ்வு மையத்தில் சிற்றுளி அறக்கட்டளையின் தலைவர் குணசேகரன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, ரன் பார் வீல்ஸ் மாரத்தான் எனும் ஒட்ட பந்தயம் கோவையில் நாண்காவது பதிப்பாக நடைபெறுவதாகவும், இந்த போட்டிகள் வரும் 20 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற உள்ளது.
இதில் 10 கிலோமீட்டர் தூரம், 5 கிலோ மீட்டர் தூரம், 3 கிலோ மீட்டர் தூரம் என போட்டிகள் நடைபெற உள்ளதாகவும், இந்த போட்டிகளானது, பாரா ஸ்போர்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை கோவை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் என பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும், தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான கூடை பந்து போட்டிகளும் நடைபெற உள்ளது என்றார், மேலும் இந்த ஆண்டு பூனேவில் நடைபெற்ற தேசிய பாராலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களை நமது சிறப்பு விருந்தினர்கள் பாராட்டும் வகையில், அவர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கங்கா மருத்துவமனை தலைவர் ராஜசேகரன், சிற்றுளி தலைவர் குணசேகரன், உடன், சிற்றுளி நிர்வாகிகள் பிரித்தி, அரசு, பத்மநாபன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..