காவலர்களுக்கே மக்களை காக்க பயிற்சியா.?
தமிழ்நாடு அரசு சென்னை கமாண்டோ பிரிவு பேரிடை மீட்பு மேலாண்மை குழு சார்பாக இன்று நாமக்கல் 25 பெண் காவலர்கள், உட்பட 60 காவலர் களுக்கு பேரடை மீப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களுக்கு நாமக்கல் கமலாலய குளத்தில் காவல் உதவியாளர் ஜி. பழனி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு கமாண்டோ பிரிவு பேரிடை மீட்பு மேலாண்மை குழு சார்பாக இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 25 பெண் காவலர்கள் உட்பட 60 காவலர்களுக்கு ஆபத்து காலங்களில், விபத்து காலங்களில், பெரும் வெள்ளம், மழைவெள்ளம், போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களை காவல் துறையினர் எவ்வாறு காப்பாற்ற வேண்டும்,
முக்கியமாக தண்ணீரில் குளங்களில் ஆற்றில் பொதுமக்களை அவர்கள் எப்படி காக்க வேண்டும். என்பது குறித்து அனைத்து வகையான பயிற்சிகளையும் இன்று சென்னை கமாண்டோ பேரிடர் மீட்பு மேலாண்மை குழு உதவி காவலர் ஜி.பழனி தலைமையிலான காவலர்கள் நாமக்கல் வருகை தந்து நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள கமலாலயத்தில் இன்று காவலர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
நேற்று கற்று தரும் வகுப்புகளும் இன்று செய்முறை பயிற்சியின் நாளை மீண்டும் பயிற்சி வகுப்பு நடத்தி இவர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறார்கள். மொத்தம் மூன்று நாட்கள் நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு இந்த பயிற்சி வழங்குகிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு சென்னை பேரிடர் மீட்பு குழுசார்பாக பயிற்சி அளித்தனர். அப்போது பயிற்சி அளித்த கமாண்டோ படை உதவி ஆய்வாளர்ஜி பழனி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் மேலும் பல தகவலை தெரிவித்தார்.
Discussion about this post