திருவள்ளுவர் பல்கலை கழகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்..!
திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி கலை கல்லூரியில் கடந்த ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதிய பெரும்பான்மையான மாணவ மாணவிகளுக்கு குறைவான மதிப்பெண்கள் வந்துள்ளதாகவும், குறிப்பாக ஒற்றை இலக்க மதிப்பெண்கள் வந்துள்ளதாகவும் கூறி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
திருவள்ளுவர் பல்கலை கழகம் சார்பில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மீண்டும் அதே ஒற்றை இலக்க மதிப்பெண் வந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகள் கல்லூரி முதல்வரை அணுகி கேட்டபோது முறையாக பதில் அளிக்காத தால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஒன்று கூடி மாணவ மாணவிகள், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தங்களை பழி வாங்கும் நோக்கில் நன்றாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒற்றை இலக்க மதிப்பெண்கள் அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டி கல்லூரி வளாகத்துக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் பல்கலைக்கழகம் தங்களது செமஸ்டர் விடைத்தாளை முறையாக திருத்தி தங்களுக்கு உண்மையான மதிப்பெண்ணை அளிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் இந்த போராட்டம் தொடரும் எனவும் அடுத்த கட்டமாக வரும் திங்கட்கிழமை அன்று வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலை கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..