ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2022ல், 172 பயங்கரவாதிகள் காஷ்மீரில் கொல்லப்பட்டதிலே 108 பேர் இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் மேலும் 74 புதிய உறுப்பினர்களும் இந்த அமைப்பில் சேர்ந்துள்ளனர். பாகிஸ்தானில் இயங்கி வரும் லஸ்கர் இ தொய்பா அமைப்புடன் இந்த அமைப்பின் தலைவர்கள் நெருக்கம் கொண்டவர்கள்.
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் உடலில் கேமராக்களை பொருத்தியுள்ளனர். தாங்கள் நடத்திய கொடூர தாக்குதலையும், அப்பாவி மக்கள் செத்து விழுவதையும் அந்த கேமரா மூலம் வீடியோ எடுத்து இருக்கின்றனர். இதற்கான திட்டங்களை தயார் செய்து கெபாடுத்தது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கராவதிம சைபுல்லா கசூரிதான். லஸ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த இந்த தீவிரவாதி மும்பை தாக்குதலிலுக்கு மூளையாக செயல்பட்ட லஸ்கர் இ தொய்பா அமைப்பின் துணை தலைவராக ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியும் கூட.
பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து பல்வேறு வகையான எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித் , இந்தியாவின் எந்தவொரு சாகசத்தையும் முறியடிக்க பாகிஸ்தான் முழு அளவில் தயாராக உள்ளது . இந்த முறை பாகிஸ்தான் பொருத்தமான பதிலடியை தரும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த முஸ்லிம் இளைஞர் பற்றியும் உருக்கமாக தகவல் வெளியாகியுள்ளது. பகல்ஹாம் பகுதியில் மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பகுதிக்கு குதிரையில்தான் செல்ல முடியும். அப்படி, சுற்றுலாப்பயணிகளை சையது ஆதில் ஹூசைன் ஷா என்ற இளைஞர் அழைத்து சென்றுள்ளார். இந்த சமயத்தில் பயங்கரவாதிகள் சுற்றியுள்ளனர். இதையடுத்து, சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்கும் விதமாக ஒரு பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை தட்டி பறிக்க ஹூசைன் ஷா முயன்றுள்ளார். அப்போது, தீவிரவாதிகள் சுட்டத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார்.
உயிரிழந்த ஷாவுக்கு வயதான பெற்றோரும் மனைவி குழந்தைகளும் உள்ளனர். குதிரை ஓட்டி, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். வீட்டில் சம்பாதித்த ஒரே நபர் ஷாதான். இப்போது, அவரையும் இழந்து குடும்பத்தினர் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.