கர்நாடகத்தில் பந்தயம் கட்டி 5 பாட்டில் மதுவை தண்ணீர் கலக்காமல் குடித்த இளைஞர் பலியானார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது நண்பர்கள் வெங்கட ரெட்டி, சுப்ரமணி . நண்பர்களாக இவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. கடந்த இரு நாட்களுக்கு முன்பு கார்த்தின் தனது நண்பர்களிடத்தில் தன்னால் 5 புல் மது பாட்டில்களை மது கலக்காமல் குடிக்க முடியுமென்று கூறி 10 ஆயிரம் பந்தயம் கட்டியுள்ளார். நண்பர்கள் ஒப்புக் கொள்ளவே, கார்த்திக் 5 புல் மது பாட்டில்களை தண்ணீர் கலக்காமல் குடித்து முடித்துள்ளார். குடித்து முடித்ததும் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கோலாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திக் இறந்து போனார். இறந்து போன கார்த்திக்கிற்கு 21 வயதே ஆகிறது. கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்துள்ளது. இறப்பதற்கு 8 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. இறந்த கார்த்திக்கின் உடலை பார்த்து அவரின் மனைவி கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக கோலார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கட ரெட்டி, சுப்ரமணி ஆகியோரை கைது செய்தனர். ஆண்டுக்கு 26 லட்சம் பேர் மது குடிப்பதால் இறந்து போகிறார்கள். இது உலகளவில் ஆண்டுக்கு இறக்கும் மக்களில் 4.7 சதவிகிதம் ஆகும்.