சீனாவில் கொரோனா னாய் பரவத்தொடங்கி உலகம் முழுவதும் நோய் பரவியது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. நோய் பரவல் அதிகமானதை அடுத்து சீனாவில் இயங்கிவரும் ஐபோன் தயாரிப்பு ஆலையான பாக்ஸ்கான் என்ற நிறுவனம் ஊளியர்களை ஆலையில் தங்கி வேலை செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் அங்கு வன்முறை வெடித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பாக்ஸ்கான் நிறுவனம் அதன் ஊளியர்களை ஆலையில் இருந்து பனி மேற்கொள்ள உத்தரவிட்ட நிலையில் ஊழியர்கள் அங்கயே தங்கி வேலை செய்து வந்தனர். ஆனால், அந்த நிறுவனம் அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை முறையாக செய்து தராமலும் ஊதியத்தை குறைத்து வழங்கியும் வந்துள்ளனர்.
இதனை தொடந்து அங்கு பணியாற்றய ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. பிணியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனால் அந்த நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஊதியம் தொடர்பாக ஏற்பட்ட கலவத்திற்கு மன்னிப்பு கேட்பதாக பாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்தது. பின்னர் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ய விரும்பும் பணியாளர்களுக்கு 10000 யுவான் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.