மழை பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது-நிர்மலா சீதாராமன்
தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கனமழை பெய்யும் என எச்சரித்த பின்னர் எடுக்கபட்ட நடவடிக்கை என்ன என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என்றும், மழை பாதிப்புகளை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல என நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி எப்படி செலவிடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , அதை செலவு செய்யாமல் இருந்திருந்தால் சென்னை என்னவாகி இருக்கும் என்பது மனசாட்சி உள்ள நபர்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
