இந்தியாவில் தற்போது ஒமைக்கிரான் வைரஸ் ஜேஎன்-1
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 80 சதவீதம் கேரளாவில் பதிவாகி உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் மற்றொரு திரிபான ஒமைக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாட்டில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் 80 சதவீத பாதிப்பு கேரளாவில் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 265 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கேரளா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், பொது இடங்களில் இனி அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சண்டிகர் நிர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூரில் கொரோனா பீதி அதிகரிப்பதால் ஹோட்டல்கள், பப்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, சில ஹோட்டல்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
