மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்..? காண கண்கோடி வேண்டும்..!!
மதுரை என்றாலே மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவிலும் மல்லிகை பூவும் அடையாளம் என சொல்லலாம் மற்ற நாட்களை விட சித்திரை மாதத்திற்கு வரும் கூட்டம் தான் அதிகம்.., காரணம் இங்கு சித்திரை மாதம் நடைபெறும் கள்ளழகர் கோவில் திருவிழா என சொல்லலாம்.
கடந்த 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா தினமும் ஒரு பூஜை வீதி ஊர்வலம் மற்றும் பட்டாபிஷேகம் என சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது..
விழா தொடங்கி இன்றுடன் 9 நாட்கள் ஆகிறது.., இந்நிலையில் நேற்று இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.. அப்போது மீனாட்சி அம்மன் சன்னதி முன்பு ஆறுகால மண்டபத்தில் எழுந்தருளி ரத்தின செங்கோளுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்..
அதனை தொடர்ந்து கோவில் அறங்காவலர் பழனிவேல் ராஜன் செங்கோலை பெற்று செங்கோலை வாங்கி கோவிலை வளம் வந்து சுந்தரேஸ்வரர் மாட வீதியில் வெள்ளி சிம்ம வாகனத்தில் காட்சி கொடுத்தார்.., இதில் ஆயிரத்திக்கிற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்..
அதனை தொடர்ந்து இன்று காலை மீனாட்சி அம்மனுக்கு தாலியில் பொட்டு வைத்து பல்லாக்கில் அலங்கரித்து வீதி உலா எடுத்து செல்லப்பட்டது.. அதன் பின் அம்பாள் வீதியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்..
நாளை மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் நடைப்பெற இருப்பதால் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண மேடை அமைக்கப்பட்டு வண்ண மலர்கள் மற்றும் வாசனை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வருகிறது..,
நாளை திருக்கல்யாணம் நடைபெற இருப்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.., மேலும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே தண்ணீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது..
நாளை அதிகாலை மீனாட்சி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும் அதன் காலை 9மணிக்கு திருகல்யாணம் நடைபெற உள்ளது..
இத் திருகல்யாணத்தை காண 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை ஆன்லைனில் முன் பதிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.., மேலும் இத் திருக்கல்யாணத்தில் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் விருந்து அளிப்பதற்காக சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் விருந்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
விழாவின் இறுதியாக வருகின்ற ஏப்ரல் 21ம் தேதி தேரோட்டத்துடன் திருவிழா முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..