மெட்ராஸ் ராயபுரம் அரிமா சங்கத்தின் 39 ஆண்டு.. புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ப்பு விழா..!
மெட்ராஸ் ராயபுரம் அரிமா சங்கத்தின் 39 ஆவது நிர்வாகிகள் பதவி ஏற்ப நிகழ்ச்சி சென்னை பிரசிடென்சி கிளப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்திய முன்னாள் தலைவர் அரிமா. ஆர். ராஜசேகர் , புதிய உறுப்பினர்களின் பதவி ஏற்ப்பு நிகழ்ச்சியை அரிமா மாவட்டத் தலைவர் சலீம், நடத்தினார்.
பின்னர் புதிய நிர்வாகிகளின் பதவிவேற்பு நிகழ்ச்சியில் அரிமா. மைக் முருகன் நடத்தி வைத்தார், மாவட்டத்தின் சார்பாக முதல் நிலை ஆளுநர் டாக்டர் அரிமா ஜி சந்திரசேகர், இரண்டாம் நிலை ஆளுநர் டாக்டர் அரிமா துரைராஜ் சிறப்புரை ஆற்றினார்கள், முன்னாள் பன்னாட்டு தலைவர் அரிமா.
பிரதீப்குமார் மாவட்டத்தின் செயல் திட்டங்கள் பற்றி அறிவுரை வழங்கினார். முன்னாள் ஆளுநர்களும் கலந்து கொண்டனர். மெட்ராஸ் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தலைவர் அரிமா. சர்தார், செயலாளர் அரிமா. பாஸ்கர் முனுசாமி, பொருளாளர் அரிமா. சரவணன் பதவி ஏற்றுக் கொண்டனர் .
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அரிமா. ஆர். ராஜன் ஏற்பாடு செய்தார். 324மாவட்டத்தில் நிர்வாகிகள் உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
-பவானி கார்த்திக்