விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 68ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. அப்போது, இலங்கையில் தனி தமிழர்கள் தேசம் அமையும் வரை மதிமுகவின் போராட்டம் தொடரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, இலங்கையில் சிங்கள தேசம் தனி, தமிழர்கள் தேசம் தனி என அமையும் வரையில் மதிமுக தொடர்ந்து பிரபாகரன் வழியில் போராடும் என தெரிவித்தார்.மேலும், தமிழகத்தில் உள்ள ஆளுநர் தமிழக அரசுக்கும் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் முற்றிலும் எதிரானவர் என குற்றம்சாட்டிய வைகோ ஆளுநர் ஒன்றிய பாஜக அரசிற்கு ஊது குழலாக செயல்பட்டு வருவதாகவும் சாடினார்
மேலும் தமிழகத்தில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியே தொடரும் என்றும் திமுக கூட்டணியே மெகா வெற்றியை பெரும் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.