சேலம் மாவட்டத்தில் தாழையூரை சேர்ந்த திமுக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல் என்பவர் இந்தி திணிப்பிற்கு எதிராக தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பிற்கு எதிராக தங்கவேல் என்பவர் தீயிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி செய்தி ஒன்றை வெளியீட்டுள்ளார் அதில், தங்கவேலு மரணம் குறித்து வந்த செய்தியை கேட்டு மனம் உடைந்துள்ளேன். இந்தி திணிப்பிற்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தங்கவேலுவிற்கு வீரவணக்கம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ‘இந்தியைத் திணிக்காதே’ எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மை உடன் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளிலும் இதயங்களிலும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை என்று கூறினார்.
மேலும், இந்தி திணிப்பை அரசியல் ரீதியாகவும் ஜனநாயக வழியுடனும் எதிர்க்க வேண்டும், இதற்காக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் இனிமேல் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Discussion about this post