நிர்வாகிகளை நெகிழ்ச்சி அடைய வைத்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ…!!
கோவைக்கு விமான மார்கமாக வந்த மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு கோவை விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளித்த மதிமுக நிர்வாகிகள். நெகிழ்ச்சி அடைந்த வைகோ
கட்சி நிர்வாகியின் வீட்டு திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விமான மார்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு இன்று கோவை விமான நிலையத்தில் மதிமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழி நெடுக வாழ்க கோஷங்களை எழுப்பிய மதிமுக நிர்வாகிகள் வைகோவுக்கு பொண்ணாடைகள் அணிவித்து அவருடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். கட்சியின் அடிப்படை தொண்டன் வழங்கிய பொண்ணாடைகள் அனைத்தையும் நின்று பெற்று கொண்டு அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து அவர்களின், கட்சி பணிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்த்து வரவேற்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என கூறி இருகரம் கூப்பி தனது நன்றிகளை கூறி விடைபெற்று சென்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..