மாறாப்போகும் மத்திய சென்னை..!! வர போகும் திட்டங்கள்..!!
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 2.23 கோடி மதிப்பீட்டில் பல நலத்திட்ட பணிகளுக்கான துவக்க பணிகளை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அடிக்கல் நாட்டு துவக்கி வைத்தார்…
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல் படுத்தியுள்ளது.. மகளிர்கான இலவச விடியல் பேருந்து முதல்.. தமிழ் புதல்வன் திட்டம் வரை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது..
இதனால் தமிழகத்தில் பல்வேறு மக்கள் பயன் அடைந்துள்ளனர்.. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கொண்டு வந்த காலை உணவு திட்டம் தற்போது பாண்டிச்சேரியிலும் தொடங்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது.. இப்படியாக இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வரவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது..
இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்திற்கான துவக்க பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1.23 கோடி மதிப்பில் நுங்கம்பாக்கம் வீராசாமி தெருவில் அமைய உள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான துவக்க பணிகளையும் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்..
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்.. கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதுமாக செலவழிக்கப்பட்டு மக்கள் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இம்முறையும் அந்த பணிகள் தொடரும் என தெரிவித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..