கவிதையின் காதலன் கார்த்திக் 46..! இன்று ஸ்பெஷல்..?
தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவோட பையனாக இருந்தாலு அதையும் தாண்டி தனக்குனு ஒரு தனி அடையாளம் படைத்தவர்கள் ஏராளம் அந்த வகையில் இடம்பெற்றவர் இந்த ஹீரோ குடும்பம் முழுவதும் சினிமாவில் இருந்தாலும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர்.
இவரு எந்த கதாபத்திரம் பண்ணலும் அதில் முழுவதிலும் தன்னுடைய உழைப்பை போட்டு இன்று வரை திரைத்துறையில் சாதனை படைத்து வருகிறார்.
ஒரு ஹீரோ ஹீரோவாக மட்டும் இல்லாமல் காமெடியனாகவும், வில்லனாகவும் காதலனாகவும் அனைத்திலும் சிறப்பாக நடித்து பாராட்ட பெற்றவர் நடிகர் “கார்த்திக்” பொதுவா இவரை பலரும் பையா கார்த்தி என்றே அழைப்பாளர்கள்.
அந்த படத்தில் இருந்து அவரு நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களே ஆகும். இவர் திரைப்படங்களில் பாடல்களை சிலவற்ற்றை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த படமே ஒரு காரில் மட்டும் எடுத்தாலும் இதில் வரும் பாடல்கள் அனைத்தும் மிகவும் அழகான கவிதையாக இருக்கும் எந்த பாடலை கேட்பது என்று தெரியாமல் அணைத்து பாடல்களையும் கேட்பார்கள் சிலர் .
ஒரு தூறல் மழை போல் வந்தாய் ஏனோ அப்படியே மறைந்து சென்றுவிட்டாய், மறுபடியும் உன்னை பார்த்தால் உன் பெயரை கேட்க தோன்றும் உன் பூ போன்ற சிரிப்பில் பறக்குபொழுது காற்றில் பறந்திட தோன்றும் இந்த பாடலை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் தன்விஷா, ஹாரி சரண் இருவரும் இணைந்து பாடிய பாடல் .
துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்..
உன் காலை அணைப்பின் பொழுது உன் மூச்சுக்காற்று என்மீது படும் பொழுது என்னை கிரங்கடிக்கிறது அது சாகும் வரை தீர்த்திடாமல் என் உயிர் இருக்கின்ற வரைக்கும் எனக்கு அது வேணும் இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிஹிப்ரான் இசையில், சத்ய பிரகாஷ், ஜிஹிப்ரான், பிரகதி குருபிரசாத் சேர்ந்து பாடிய பாடல் .
சாகும்போதும் தீர்ந்திடாது வா உயிரே..
யாருக்கும் சொல்லாமல் உன் இதயத்தில் இடம் புடிச்ச அதற்க்கு காரணம் நீயே தான் எந்த காரணமும் இல்லாமல் உன் கண்ணுக்குள் மாட்டி சிக்கி தவிக்கின்றேன் உன் அழகை பார்த்தும் உன் மனசை பார்த்தும் மயங்கி போய்விட்டேன்.
யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ளே இடம் புடிச்சேன்
உன்னால… தன்னால…
காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ளே சிக்கி தவிச்சேன்
முன்னால… பின்னால…
வானில் இருக்கின்ற நிலா கூட தேய்ந்து போகும் ஆனால் உன் நிலவை போன்ற முகம் என்றும் தேய்ந்து போகாது, சூரியனை போல் உன் இரு கண்களும் சுட்டு எரிகின்றது இமைகள் இரண்டும் போர் இடுகின்றது.
அதில் நான் தொலைந்து போகிறேன் என் அன்பே இந்த பாடலை இசைஅமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் ,சோனு நிகம், சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமார் முவரும் சேர்ந்து பாடிய பாடல் இது.
இரவில் வந்தது சந்திரனா என் அழகே
வந்தது உன் முகம்தான்
பகலில் எரிப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்..
செல்லம் உனக்கு என்னவேண்டுமானாலும் என்னிடம் கேள் உனக்காக எல்லாம் தருகிறேன். தொலைவில் இருந்து என்னை பார்க்கும் பொழுது என் மனதை கொன்று செல்கிறாய். நீ என்கிட்ட வா என்று மனசு சொல்லுது ஆனால் வெக்கம் தள்ளி போக சொல்லுகிறது.
இந்த பாடலை இசைஅமைப்பாளர் வித்யாசாகர் இசையில், உதித் நாராயண், ரோஷன், சுர்முகி சேர்ந்து பாடிய பாடல் .
கிட்ட கிட்ட வா வான்னு
காதல் வந்து கை நீட்ட..
தள்ளி தள்ளி போ போன்னு
வெட்கம் வாழ் நீட்ட..
திரைப்படங்கள் மூலம் நம்மை ரசிக்க வைத்து கொண்டிருக்கும் கார்த்திக் அவர்களுக்கு ரசிகர்கள் சார்பாகவும் மதிமுகம் குடும்பத்தினர் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
– சரஸ்வதி