6ம் கட்ட மக்களவை தேர்தல்..! தற்போதைய வாக்கு பதிவு..!! மோடி போட்ட ட்வீட்..!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளதை தொடர்ந்து. 6ம் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களின் வாக்கினை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே போல், ஒடிசாவில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
டெல்லியில் 8 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகார் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி உட்பட 58 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் :
ஹரியானா மாநிலத்தின் கர்னால் மக்களவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும், பாஜக வேட்பாளருமான மனோகர் லால் கட்டார், தனது முதல் வாக்கினை காலை 7:08 மணிக்கு கர்னாலில் உள்ள வாக்குச் சாவடியில் ஜனநாயக கடமையை செலுத்தினார்.
பிரதமர் மோடி வேண்டுகோள் :
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், “2024 மக்களவைத் தேர்தலில் 6-வது கட்டமாக வாக்களிக்கும் அனைவரையும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வாக்கும் கணக்கிடப்படும், உங்களுடையதையும் எண்ணுங்கள். மக்கள் தேர்தலில் ஈடுபடும்போதும், தீவிரமாக செயல்படும் போதும் ஜனநாயகம் செழிக்கும். பெண் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி :
டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அவரது மனைவி லட்சுமி பூரி ஆகியோர் காலை 9:02 மணிக்கே தனது வாக்கினை பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 8:55 மணிக்கு தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் :
டெல்லியில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.., அனைவரும் இன்று ஒருநாள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
டெல்லி அமைச்சர் அதிஷி மர்லினா சிங் :
டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான அதிஷி மர்லினா சிங் காலை 8:02 மணிக்கு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இந்திய கூட்டணியின் கோட்டையாக இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் தங்கள் கடமையை செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு உரிய பாதுகாப்பை காவலர்கள் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.
ஒடிசாவில் 5டி திட்டத்தின் தலைவரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான வி.கே.பாண்டியன் ஆட்டோ ரிக்ஷாவில் வந்து தனது வாக்கினை செலுத்தினார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ஜனநாயகத்தில் அனைவரும் சமம். ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்று வாக்களிக்க வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். ஆட்டோ சங்கம் என்னைக் கேட்டுக் கொண்டதால் நான் ஆட்டோ ரிக்ஷாவில் வந்தேன்” என அவர் கூறினார்.
ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் :
ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் காலை 7: 45 மணிக்கு தனது வாக்கினை செலுத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீங்கள் அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்பதே ஜார்கண்ட் வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள். வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளேன். வளர்ச்சியில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து மேற்குவங்கம் – 21.04%
ஜார்க்கண்ட் – 16.24%
டெல்லி – 19.38%
ஜம்மு & காஷ்மீர் – 13.89%
பீகார் – 14.26%
ஒடிசா – 9 – 13.63%
ஹரியானா – 12.41%
உ.பி – 15.33%
– லோகேஸ்வரி.வெ