“பார்க்காமலே காதல்.. காலமெல்லாம் காதல் வாழ்க..”
காதல் கோட்டை:
கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மனதில் கோட்டையை கட்டிய திரைப்படம் காதல் கோட்டை. இந்த படத்தில் நடிகர் அஜித் ஹீரோவாகவும் நடிகை தேவையாணி ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.
கதை சுருக்கம்:
கல்லூரி சான்றிதல்களை கொண்ட பையை ரயிலில் பயணிக்கும் போது நடிகை தேவையானி தொலைத்து விடுகிறார். இந்த சான்றிதல்கள் நடிகர் அஜித்திடம் கிடைக்க அதை பார்த்து தேவையாணிக்கு கொரியரில் சான்றிதல்களை அனுப்புகிறார்.
இதனை பெற்ற நடிகை அவருக்கு நன்றி கடிதம் எழுதி அனுப்புகிறார். அந்த கடிதம் மூலம் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறி இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதலிக்க தொடங்கினர். இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் கதை.
முதன்முதலில்:
தமிழ் சினிமாவில் நிறைய காதல் பற்றிய திரைபடங்கள் வெளிவந்தாலும் முதன்முதலாக பார்க்காமல் காதல் வளர்த்த திரைப்படம் காதல் கோட்டை. இந்த படத்திற்காக இயக்குநர் அகத்தியன் தேசிய விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
பாடல்கள்:
இந்த படத்தில் இடம் பெற்ற 7பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வந்தது.
காதலை ஒரே பாடலில் அழகாக சித்ரா மற்றும் உண்ணிகிருஷ்ணண் பாடியுள்ளனர்.
ஜாதி இல்லை பேதம் இல்லை சீர்வரிசை தானம் இல்லை காதல்… ஆதி இல்லை அந்தம் இல்லை ஆதாம் ஏவாள் தப்பும் இல்லை காதல்…
ஊரேன்ன பேரேன்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்…..
கடிதம் மூலமா வளர்த்த காதல் ஒருவரை ஒருவர் எவ்வளவு காதலிக்கிறார்கள் என்று கிருஷ்ணராஜ் மற்றும் அனுராதா ஸ்ரீராம் பாடியுள்ளனர்.
தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்கிறதே…வேண்டும் ஒரு சூரியனை நீ அனுப்பு குளிர் கேட்கிறதே….
பாடத்தின் வெற்றிக்கு முதுகெழும்பாக இருப்பது கிளைமக்ஸ் காட்சி தான். அந்த அளவிற்கு மிக அபாரமாக நடித்திருப்பார் நடிகை தேவையானி என்பது பெருமைக்குரியது. இந்த படம் வெற்றி பெற்றதன் மூல காரணம் காதலர்களுக்கே உரிய படமாக இருந்தது தான். தற்போது இந்த படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
-பவானி கார்த்திக்