தாமரையின் காதல் வரிகள்..!! இந்த பாடலுக்கு எது நிகர்..?
கோவையில் பிறந்த தாமரை நன்கு கதைகள் எழுதும் திறமை கொண்டவர்., ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும், சந்திரக் கற்கள், என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள் போன்ற கதைகளை எழுதியுள்ளார் இதனால் அவருக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகிய விருதுகளையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.
சினிமா மீது ஆர்வம் கொண்ட தாமரை அப்பாவின் உதவியுடன் தமிழ் சினிமாவில் இணைந்தார்..,
காதல் என்றால் கவிதை இல்லாமல் இருக்குமா அல்லது காதலிக்கும் பெண்ணை பற்றி கவிதை வர்ணிக்காமல் தான் இருக்க முடியுமா..? என்னதான் தமிழ் சினிமாவில் ஆண் பாடல் ஆசிரியர்கள் அதிகம் இருந்தாலும் பெண் பாடல் ஆசிரியர்களின் எண்ணிக்கை சற்று குறைவு என சொல்லலாம்.
ஆனால் அப்படி இருந்தாலும் அந்த பெண் பாடல் ஆசிரியர்கள் எழுதிய பாடல் வரிகளுக்கு நிகர் ஏதும் இல்லை என சொல்லாம்.., அப்படி நம்மை காதலோடு தாலாட்டி “தாமரை”யின் பாடல்கள் பற்றி பார்க்கலாம்.
பிரபு, வடிவேலு, சுப்பு லட்சுமி கவுதமி இவர்கள் நடிப்பில் வெளியான “இனியவளே’ திரைப்படத்திற்கு தான் தாமரை முதன் முதலில் பாடல் எழுதினார்..
இரவில் வராத சூரியனே
ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதை இரவல் வாங்க நின்றாய்
ஆ…ஆ……சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும்
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு..
ஆனால் இந்த பாடலும் படமும் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை என சொல்லலாம்.., ஆனால் விடாமல் முற்சித்த தாமரை.. இந்த உலகமே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு எழுதிய பாடல் தான் மின்னலே படத்தில் வரும் வசீகரா பாடல்..
மாதவன் மற்றும் ரீமாசென் நடிப்பில் வெளியான இந்த பாடலை விரும்பாத காதலர்களோ அல்லது கணவன் மனைவியோ இருக்க முடியாது. மழை வந்தால் எந்த பாடல் நினைவிற்கு வருகிறதோ தெரியாது ஆனால் இந்த பாடல் நினைவிற்கு வரும்..
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சினேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குளே நான் வேண்டும்”
இந்த பாடலுக்கு பின் தாமரைக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உருவானது என சொல்லலாம்.., இந்த படத்திற்கு மட்டுமின்றி பாடலுக்கும் விருதுகள் கிடைத்து.
ஒன்றுக்கு ஒன்று சலித்தது இல்லை என சொல்லும் அளவிற்கு வந்த பாடல் தான்.., வாரணம் ஆயிரம் படத்தில் வரும் இந்த பாடல்.. தன் காதலனோடு தனிமையில் இருக்கும் போது தோன்றும் உணர்வுகளை இவரால் மட்டுமே பாடலால் எழுத முடியும்..
சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடித்து
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட
இந்த வரிகளை கேட்கும் போது நமக்குள்ளும் ஏதோ ஒரு காதல் உணர்வு தீண்டி விட்டு செல்லும்..
குறிப்பாக இந்த பாடல் ஒவ்வொரு பெண்ணும் காதலின் நினைவுகளையும்.., காதலனுடன் சண்டையிட்ட பின்னும் கேட்கும் கேள்வியை பாடலால் எழுத இவரால் மட்டுமே முடியும்..
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
வரம் கிடைத்தும் நான்
தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே..,
தான் காதலிக்கும் பெண்ணின் தலையில் இருந்து ஒரு முடி விழுந்தால் கூட தாங்கிக்கொள்ள முடியாது என்பது உணர்த்தியதும் இவரே..
நகுலன் சுனேனா நடிப்பில் வந்த “காதலில் விழுந்தேன்” படத்தில் வரும் இந்த பாடல்
உன் தலைமுடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே..,
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்..
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது அன்பே..
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்..
இந்த பாடல்கள் மட்டுமா திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் தோன்றும் பாடலை எழுதியதும்.., நம் தாமரையே..
விக்ரம் த்ரிஷா நடிப்பில் வெளியான சாமி படத்தில் வரும் இந்த பாடலை விரும்பாதே ஆளே இல்லை என சொல்லலாம்..
இவன் தானா.., இவன் தானா..
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
சுகமான ஒரு சுமையானேன்..
ஞாயிறு மதியம் சமையல் உனது..,
விரும்பி நீ சமைத்திடுவாய்..
வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்..
இதுபோன்ற காதல் பாடல்கள் மட்டுமின்றி அப்பா மக்களுக்கான பாடல் வரை 300க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் எழுதியுள்ளார்.. தாமரை எழுதிய அனைத்து பாடல்களும் ஹிட் என சொல்லலாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..