உடலுறவில் பெண் உயிர் இழப்பு…! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்…!!
பொன்னன் வட்டம் பகுதியில் வீட்டினில் பெண் மர்மமான உயிரிழப்பு சம்பவத்தில் இரண்டு பேர் கைது.. அடித்து துன்புறுத்தி கழுத்தை நெறித்து உடலுறவில் ஈடுபட்டதால் உயிரிழந்து விட்டதாக திடுக்கிடும் வாக்குமூலம்..
திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் அடுத்த பொன்னன் வட்டம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சிவா இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சிவா தனது மனைவியை தனியாக வீட்டில் விட்டு பெங்களூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
மேலும் சந்தியா தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த பதினோராம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மகளிர் குழு நடத்தி வரும் மாது என்பவர் சந்தியாவிடம் லோன் பணம் வாங்க வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டில் நுழைந்து பார்த்தபோது கட்டிலில் சந்தியா பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாது கத்தி கூச்சலிட்டார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது சந்தியாவின் தொலைபேசி ஆராய்ந்த போது அவருக்கு இரண்டு தொலைபேசி எண்ணில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்ததாக தெரிகிறது இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் குமரேசன் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டத்தில் திடிகிடும் தகவல்கள் வெளியாகின இதில் குமரேசனுக்கும் சந்தியாவுக்கும் இடையே முதலில் 7 வருடங்களாக தகாத உறவு இருந்து வந்தது இந்த நிலையில் குமரேசன் சிங்கப்பூருக்கு சென்றதன் காரணமாக அதே பகுதியில் சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் சந்தியா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு திரும்பவும் குமரேசன் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் சந்தியாவுக்கும் விக்னேஷும் இடையே உள்ள தகாத உறவு தெரிந்துள்ளது.
இந் நிலையில் இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த பத்தாம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த சந்தியாவுடன் குமரேசன் உடல்உறவில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார். ஆனால் சந்தியா அதை மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குமரேசன் சந்தியாவின் கன்னத்தில் அறைந்தும் கழுத்தை நெரித்தும் வலு கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்டதன் காரணமாக மயக்கி நிலைக்குச் சென்றுள்ளார்.
அதன் பின்பு அங்கிருந்து குமரேசன் சென்ற நிலையில் குமரேசன் வந்ததை அறிந்த விக்னேஷும் அவனுடன் மட்டும் உடலுறவில் ஈடுபடுவாயா என்னுடன் இருக்க மாட்டாயா என்று கூறி சந்தியாவை அடித்து துன்புறுத்தி மயக்க நிலையில் இருந்த சந்தியா உடன் உடலுறவில் ஈடுபட்டதால் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். என்ற திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் இருவரும் தெரிவித்தனர்.
இதன் காரணமாக மயக்க நிலையில் இருந்த சந்தியாவை விடாமல் உடலுறவில் ஈடுபட்ட விக்னேஷ் அடித்து துன்புறுத்தி உடலுறவு ஈடுபட்ட குமரேசனையும் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் மேஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தி சிறையில் அடைத்தனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..