எங்கள் வேங்கையே நீ வாழ்க…! வெல்க…!
திருச்சி நாடாளுமன்ற எம்.பி ஆக இருக்கும் அண்ணன் துரைவைகோ அவர்களுக்காக ஒரு கவிதை…
நீதியின் பக்கம் நிற்பவன் நீ…
ஆங்கில மொழியை அற்புதமாய் பேசும்
ஆற்றல் கொண்டவர் எம் துரை வைகோ..!
அடுத்த பிரதமர் ராகுலின் முன்பு
எழுப்பிய முழக்கத்தை
ஆங்கிலத்தில் எழுப்பி இருந்தால்…
அவருக்கும் அது புரிந்து
இவருக்குப் பெரும் மதிப்பைத் அது தந்திருக்கும்..!
தனக்கான மதிப்பை விட
தமிழுக்கான கெளரவமே பெரிது என்று…
ஒன்றிய அரசே.. ஒன்றிய அரசே..
எதிர்க் கட்சிகளை ஒடுக்காதே என்று
டெல்லி வீதியில் கில்லியாய்
தமிழில் உரக்க முழக்கமிட்டு
நாங்கள் – பெரும் தமிழர் படை என்பதை நிருபித்த எங்கள் வேங்கையே நீ வாழ்க…! லெல்க…
சமத்துவம், சமூக நீதி, மனிதநேயத்தை, உயர்த்துவோமென.. இந்திய நாட்டை இயக்குகின்ற
அவைக்குள்ளேயே
உரக்கச் சொல்லி உறுமொழி ஏற்று அதிரவிட்ட நீ…
நீதியின் பக்கம் எப்போதும் நிற்பவன்…!
உன்னைப்போய் ஒரு சாதியின் பக்கம்
நிற்பவன் என்று சொல்லுகின்ற அர்ப்பர்களை
ஊதிப் புறம் தள்ளு…!
நம் அப்பாவைப் போலவே – நீ
வீறு கொண்டு செயலாற்றி வெல்க..