பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர், மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்து மோடி உரையாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களின் எதிர்ப்புகளால் முடக்கப்பட்டு வருகிறது. மேலும் மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்றும் இன்றும் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பகல் 12 மணிக்கு பேசுகிறார். இன்று மக்களவையில் கூடுதல் அனல் பறக்கும் என்றே சொல்லலாம்..!