செல்போன் செயலி மூலம் கடன்… திரும்ப கொடுக்காததால் ஆபாச புகைப்படம்..மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்..!
சென்னை ஆவடியை சேர்ந்தவர் சத்யநாராயணன் (37) தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் செல்போன் செயலி மூலம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்தாததால் அவருடைய செல்போனுக்கு பல்வேறு குறுந்தகவல்கள் வந்ததுடன் மர்ம நபர்கள் சிலர் பணத்தை திரும்ப செலுத்துமாறு கூறி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
அதோடு அவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போன்ற அவருடைய தாயாரை ஆபாசமாக சித்தரித்தும் புகைப்படம் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையில் சத்தியநாராயணனின் மனைவியையும் ஆபாசமாக மார்பிஃங் செய்து அவருக்கு அனுப்பியுள்ளனர்.
இதனை கண்டு அடிர்ச்சி அடைந்த அவர் மனஉளைச்சலில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்து எடுத்து குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் அருகில் இருந்த அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலன் தராமல் உயிரிழந்தார். போலீசார் யாரு இதுபோன்ற வேளையில் ஈடுப்பாட்டர்கள் என்பதை குறித்து விசாரணையில் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்