எல்.ஐ.சி இந்தித் திணிப்பு முயற்சி…!! ராமதாஸ் கண்டனம்..!
எல்.ஐ.சி நிறுவனத்தின் இந்தித் திணிப்பு முயற்சி கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்.ஐ.சி-யின் இணைய தள முகப்புப்பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்தி மொழிக்கு மாற்றப்பட்டு இருப்பது இந்தித் திணிப்பு என்றும் எல்.ஐ.சி நிறுவனத்தின் இந்த இந்தித் திணிப்பு முயற்சி கண்டிக்கத்தக்கது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளப்பதிவில் இந்தியாவில் அனைத்து மொழி பேசும் மக்கள் வசிக்கும் நிலையில் இந்திக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதா..? வெளிநாட்டில் இருந்து இங்கு விற்பனைக்காக வரும் பொருட்கள் கூட தமிழ் அல்லது ஆங்கில மொழியிலே அச்சடிக்கப்பட்டு இருக்கிறது., அப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ள எல்.ஐ.சி நிறுவனம் தனது முதன்மைப் பக்கத்தை இந்தி மொழியில் வைத்திருப்பதது வாடிக்கையாளர்களை இழிவுபடுத்தும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டு மக்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தும் கூட மத்திய அரசு இந்தி திணிப்பிற்கு முயற்சிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்.ஐ.சி இணைய தளத்தில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இருமொழிச் சேவைகள் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்மொழிச் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனவும், இணையதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..